பழ. நெடுமாறன் தலைமையில் தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் பரமக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்

இடமிருந்து திரு. குத்புதீன் ஐபக், ஐயா பழ. நெடுமாறன், திரு. முகவைத்தமிழன்

 

தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் இலங்கையில் நடைபெறும் இனப் படுகொலையை கண்டித்து இன்று இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 18.11.2008 அன்று மாலை 3 மணியளவில் நடத்தப்பட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திரு. சி. பசுமலை, தமிழர் தேசிய இயக்கம் தலைமை வகித்தார்கள். இந்திய தேசிய லீக்கை சேர்ந்த திரு. சாகுல் ஹமீது , தமிழ்நாடு உடல் ஊணமுற்றோர் பேரவையை சேர்ந்த திரு. அப்துல் நஜிமுதீன், திரு. ம. காமராஜர், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் திரு. பீட்டர் வளவன், கவிஞர். திரு. முகவை அரசுமனி, நகர் மலர் செய்தியாளர் திரு. என். சொர்னவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இந்திய தேசிய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள்,இந்திய தேசிய லீக், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், பாட்டாளி மக்கள் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் , அமைப்புகள் கலந்து கொண்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக், இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆலோசகர் திரு. முகவைத்தமிழன், தமிழர் தேசிய இயக்க பொதுச் செயளாலர் திரு. கா. பரந்தாமன், தியாகி இமானுவேல் பேரவை பொது செயளாலர் திரு. சந்திரபோஸ், விடுதலை சிறுத்தைகள் மு. குணவேந்தன், செ.அ.தொ.நல சங்கம் ம. நாகராஜன், ம.ச.இ.க செயளாலர் குணசேகரன், வே. முருகேசன், தமிழ் பாதுகாப்பு பேரவை தலைவர் திரு. நாகேஸ்வரன், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயளாலர் திரு. தங்கராசு, மனித உரிகைமள் கழகம் செந்தில் விஸ்வனாத், வைகை பாசன விவசாய சங்கம் மாநில செயளாலர் திரு. மு. மதுரை வீரன், விடுதலை சிறுத்தைகள் சிவகங்கை மாவட்ட செயளாலர் திரு. ஆல்பர்ட் (எ) நந்தன், ஆதி தமிழர் பேரவை சுகுமாறன், சி.பி.ஐ ஒன்றிய செயளாலர் சுப்பிரமனியன், சமத்துவ மக்கள் கட்சி வேலுச்சாமி, கோ. இராமசாமி, தோலூர் பஞ்சாசரம், இந்திய தேசிய மக்கள் கட்சியின் திரு. ஜஹாங்கீர் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

 

ஐயா. பழ. நெடுமாறன் பேசுகிறார் அருகில் தமிழ் பாதுகாப்பு இயக்கம் திரு. நாகேஸ்வரன், அமாந்திருப்பது குத்புதீன் ஐபக், டாக்டர் பக்ருதீன், திரு. முகவைத்தமிழன், திரு. ஜஹாங்கீர்

 

பின்னர் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் ஐயா. திரு. பழ. நெடுமாறன் அவர்கள் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை கண்டித்து பேருரை நிகழ்த்தினார்கள். நிகழச்சியின் இறுதியில் செ.அ.தெ.ந.மு.ச. தலைவர் திரு. பா. ஞானமுத்து அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள். பின்னர் இராமேசுவரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஐயா பழ. நெடுமாறன் அவர்களோடு அனைவரும் புறப்பட்டு சென்றனர்.

 

தமிழ் சிந்தனையாளர் திரு. சை. செளந்தரபாண்டியன், தமிழிய சட்ட நிறுவனம் திரு. ப.பா. தியாகராஜன் ஆகியோர் ஒருங்கினைத்திருந்தனர்.

 

செய்திகள் : திரு. ஜஹாங்கீ்ர்- இ.தே.ம.க

இயக்குனர் அமீர் உடன் சந்திப்பு

இடமிருந்து திரு. ஜஹாங்கீர், திரு. பக்ருதீன், திரு. அமீர், திரு. குத்புதீன் ஐபக்

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்தக் கோரியும், இந்திய குடிமக்களான 500 க்கும் மேறப்பட்ட தமிழ் மீனவர்கள் சிங்கள் இன வெறி கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டும் வாய்மூடி மெளனம் காக்கும் தன்மானம் இல்லாத இந்திய அரசை கண்டித்தும், உடனடி நடவடிக்கை எடுத்து இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாத இலங்கை இரானுவத்தை தடுத்து நிறுத்தக் கோரியும், இலங்கையில் நடக்கும் இனப்படுகொலைக்கு ஆயுதம் வழங்குவதை இந்திய அரசு நிறுத்கத் கோரியும் இராமேஸ்வரத்தில் நடந்த பேரனியில் ஆக்ரோச உரை நிகழ்த்திய காரனத்திற்காக பொய் வழக்குகள் புனையப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தற்போது பினையில் உள்ள இனமானத் தமிழன், தமிழ் இனப் போராளி பிரபல இயககுனர் திரு. அமீர் அவர்களை இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக், இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆலோசகர் திரு. முகவைத்தமிழன், இந்திய தேசிய மக்கள் கட்சியின் முகவை மாவட்ட செயளாலர் திரு. ஜஹாங்கிர், இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் டாக்டர். பக்ருதீன் B.H.M.S ஆகியோர் நேற்று மதுரையில் சந்தித்தனர்.

 

இஸ்லாமிய பத்திரிகையான சமரசத்தில் இயக்குனர் அமீர் அவர்களின் பேட்டியின் மூலம் வெளியான சமுதாய அக்கரையை அனைவரும் அறிவர். இவ்வாறு பல இஸ்லாமிய அறிவு ஜீவிகளின் பாராட்டுதலை பெற்ற சிந்தனையாளர் திரு. அமீர் அவர்களுடன் டாக்டர். பக்ருதீன் B.H.M.S, திரு. முகவைத்தமிழன், திரு. குத்புதீன் ஐபக் ஆகியோர் தற்போது ஊடகத்துரைகளில் நமது சமுதாயத்தின் நிலை குறித்தும் இதை எவ்வாறு மாற்றி அமைப்பது என்றும் இன்னும் சமுதாயத்தை எப்படி ஒற்றுமைப்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

 

இனப்போராளி சீமானுடன் ஒரு சந்திப்பு

இடமிருந்து திரு. நாகேஸ்வரன், திரு. ஜஹாங்கீர், திரு. குத்புதீன் ஐபக், திரு. முகவைத்தமிழன், திரு. சீமான் ஆகியோர்

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்தக் கோரியும், இந்திய குடிமக்களான 500 க்கும் மேறப்பட்ட தமிழ் மீனவர்கள் சிங்கள் இன வெறி கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டும் வாய்மூடி மெளனம் காக்கும் தன்மானம் இல்லாத இந்திய அரசை கண்டித்தும், உடனடி நடவடிக்கை எடுத்து இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாத இலங்கை இரானுவத்தை தடுத்து நிறுத்தக் கோரியும், இலங்கையில் நடக்கும் இனப்படுகொலைக்கு ஆயுதம் வழங்குவதை இந்திய அரசு நிறுத்கத் கோரியும் இராமேஸ்வரத்தில் நடந்த பேரனியில் ஆக்ரோச உரை நிகழ்த்திய காரனத்திற்காக பொய் வழக்குகள் புனையப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தற்போது பினையில் உள்ள இனமானத் தமிழன், இனப் போராளி திரு. சீமான் அவர்களை இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக், இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆலோசகர் திரு. முகவைத்தமிழன், இந்திய தேசிய மக்கள் கட்சியின் முகவை மாவட்ட செயளாலர் திரு. ஜஹாங்கிர், தமிழ் பாதுகாப்பு பேரவையின் தலைவர் திரு. நாகேஸ்வரன் அவர்கள், இந்திய மாணவர் பேரவை (AISF) செயளாலர் தோழர் பிரபாகரன் ஆகியோர் நேற்று மதுரையில் சந்தித்தனர்.

 

 

திரு. முகவைத்தமிழன், திரு. சீமான் , திரு. குத்புதீன் ஐபக்

இந்த சந்திப்பின் போது திராவிடர் கழக தோழர் திரு. இலங்கோ உட்பட பலர் உடனிருந்தனர். திரு. குத்பதீன் ஐபக், திரு. முகவைத்தமிழன், திரு. நாகேஸ்வரன், திரு. பிரபாகரன் ஆகியோர் இனப் போராளி திரு. சீமான் அவர்களுக்கு தங்கள் ஆதரவையும் அன்பையும் தெறியப்படுத்தினர். இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக் அவர்களோடும், திரு. முகவைத்தமிழன் அவர்களோடும் இன்ப்போராளி திரு. சீமான் அவர்களும் அவர் உடனிருந்த திராவிடத் தோழர்களும் இரன்டரை மனி நேரத்திற்கும் அதிகமாக கலந்துரையாடினர்.

 

திரு. நாகேஸ்வரன், திரு. சீமான், திரு. பிரபாகரன் (AISF) ஆகியோர்

 

இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக், தமிழ் பாதுகாப்பு பேரவையின் தலைவர் திரு. நாகேஸ்வரன், இந்திய மாணவர் பேரவை (AISF) செயளாலர் தோழர் பிரபாகரன், இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆலோசகர் திரு. முகவைத்தமிழன், திரு. ஜஹாங்கீர் ஆகியோர் தங்களுடன் ஒத்த கருத்துடைய இன்ன பிற அமைப்புக்களை ஒன்றினைத்து விரைவில் முகவையின் தலைநகர் இராமநாதபுரம் அரன்மனை திடலில் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவதென்றும் அந்த நிகழச்சியில் இனப்போராளிகள் திரு. சீமான் மற்றும் திரு. அமீர் ஆகியோர் கலந்து கொள் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்றுக் கொண்ட திரு. சீமான் அவர்கள் அந்த நிகழச்சியில் தான் கட்டாயம் கலந்து கொள்வேன் என்று வாக்களித்தார்.

 

பின்னர் அனைவரும் சோந்து தேனீருடன் கூடிய சின்றுன்டியுடன் தங்கள் கலந்துரையாடலை முடித்துக் கொண்டனர். இந்திய மாணவர் பேரவை (AISF) செயளாலர் தோழர் பிரபாகரன் அவர்கள் இந்நிகழச்சிக்காக மாணவர் அமைப்புக்களை கலந்து பேசி இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைமையில் மாணவர்களை ஒருங்கினைத்து போராட துனை புரிவதாக வாக்களித்தார்.இந்த சந்திப்பில் பேராளி திரு. சீமான் அவர்களுடன் பல்வேறு தரப்பட்ட அரசியல் நிகழ்வுகளை பற்றி ஆராயப்பட்டது. இறுதியில் வரும் தேர்தலில் நாம் அனைவரும் ஒருங்கினைந்து தமிழகமெங்கும் அனைத்து தொகுதிகளிலும் களமாடி இனத்துரோகிகளை மக்களுக்கு அடையாளப்படுத்தி அவர்களை தோற்கடிப்போம் என்றும் அதற்கு திரு. அமீர் உட்பட அனைத்து தோழர்களையும் இனைத்து ஓரணியில் நின்று அரச அடக்குமுறைக்கு எதிரான போராடுவோம் என்றும் உறுதியளித்தார்.

 

செய்தி தொகுப்பு : திரு. ஜஹாங்கீர்

கலைஞர் அறிவாலயம் சர்ச்சை - தமிழன் எக்ஸ்பிரஸ்சில் IDMK பேட்டி

தமிழன் எக்ஸ்பிரஸ் நவம்பர் 06-2008

கலைஞர் அறிவாலயம் சர்ச்சை


வக்ஃபு வாரிய இடத்தில் கலைஞர் அறிவாலயம் என்கிற தலைப்பில் அக்டோபர் 23 தேதியிட்ட தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில் நாம் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம் அதில் திருச்சி மேலச்சிந்தாமணியில் உள்ள “ருஸ்தும் பீ“ பள்ளிவாசலுக்குச் சொந்தமான 12 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 30,000 சதுரடி இடத்தை தி.மு.க.வினர் வக்ஃபு வாரிய அனுமதியில்லாமல் தன் வசப்படுத்தி கட்சி கட்டிடமும் திருமண மண்டபமும் கட்டியுள்ளது பற்றி எழுதியிருந்தோம். இந்த செய்தியை படித்த பல்வேறு அரசியல் இயக்கப் பிரமுகர்களும் போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர்.

 

இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர் அலாவுதீன் நம்மிடம் ஒரு ஆளுங்கட்சி அதன் கட்சி அலுவலகத்திற்காக பள்ளி வாசலுக்கு சொந்தமான இடத்தை அபகரித்திருப்பது மிகப்பெரிய தவறு. பத்திரிக்கைகளில் இது பற்றி செய்திகள் வந்தும் கூட தமிழக முதல்வர் அந்த இடத்தை தார்மீக ரீதியாக வக்ஃபு வாரியத்திடம் ஒப்படைக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது. அநீதியானது.

 

வக்ஃபு வாரிய சொத்துக்களை என்னென்ன விஷயங்களுக்காக பயன்படுத்த குத்தகைக்கு விடலாம் என்று வக்ஃபு வாரிய சட்டத்தில் வழிவகைகள் உண்டு. பள்ளிவாசல், அரபி பாடசாலை, அனாதை இல்லம், முதியோர் இல்லம், பள்ளிக்கூடம், உள்ளிட்ட 17 வகையான மக்கள் நல பயன்பாட்டிற்கு மட்டுமே குத்தகைக்கு விடலாம். அல்லது பயன்படுத்தலாம். என்று கூறப்பட்டுள்ளது அதை வக்ஃபு வாரியம் கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும். மேலும் தாங்கள் அபகரித்துள்ள இடத்தை தற்போது வக்ஃபு வாரியத்திடம் வாடகைக்கு தி.மு.க கேட்டுள்ளதாக தெரிகிறது.

 

அரசியல் கட்சிகளின் பயன்பாட்டிற்காக வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான இடத்தை துளி கூட வாடகைக்கோ, குத்தகைக்கோ, ஒப்படைக்க கூடாது. அது தவறான நடைமுறைக்கு வழிவகுக்கும். அவ்வபோது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அரசியல் அதிகாரத்திற்கு வரும் ஒவ்வொரு அரசியல் கட்சியும் இப்படி வக்ஃபு வாரிய சொத்துக்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்தால் எதிர்காலத்தில் வக்ஃபு வாரிய சொத்துக்கள் அனைத்துமே காணாமல் போய்விடும். வக்ஃபு வாரிய தலைமையும் அதன் உறுப்பினர்களும் தி.மு.கவின் ஆக்கிரமிப்பில் உள்ள பள்ளிவாசல் இடத்தை உடனே மீட்க வேண்டும். இல்லையேல் எங்கள் கட்சி அந்த இடத்தை மீட்க போராட்டத்தில் இறங்கும் என்றார் அலாவுதீன் ஆவேசத்துடன்.

 

முழு செய்தியையையும் வாசிப்பதற்கு கீழே உள்ள புகைப்படத்தில் கிளிக் செய்து வாசிக்கவும்

கீழக்கரை இட ஒதுக்கீடு குறித்த கருத்தரங்கம் - செய்திகள்


மேடையில் தலைவர்கள்

நவம்பர் 04, கீழக்கரை, இன்று கீழக்கரையில் இந்திய தேசிய மக்கள் கட்சியால் நடத்தப்பட்ட இட ஒதுக்கீடு குறித்த கருத்தரங்கு சிறப்பாக நடைபெற்றது. தமிழக அரசால் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு ஒரு ஏமாற்று வேலை அந்த இட ஒதுக்கீடு தேவையில்லை என்று கிருஸ்த்தவர்கள் அதை திருப்பி கொடுத்து விட்டனர் ஆனால் இன்னும் முஸ்லிம்களில் சிலர் கிடைக்காத ஒன்றை கிடைத்ததாக கூறி ஏமாற்றி வருகின்றார்கள்.

 

இந்நிலையில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் கீழக்கரை கிழை “தமிழக இட ஒதுக்கீடு ஏமாற்று வேலையா? ” என்ற தலைப்பில் கீழக்கரை மாநாகரில் கருத்தரங்கு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. ஹீசைனியா மஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கருத்தரங்கை திரு. எஸ். முஹைதீன் அடுமை அவர்கள் , நகர் தலைவர் - கீழக்கரை தலைமையேற்று துவக்கி வைத்தார்கள்.

 


திரு. குத்புதீன் ஐபக், திரு. முகவைத்தமிழன், திரு. சான்பாஷா, திரு. அப்துல் ரவூஃப் பாக்கவி

 

திரு. முகவைத்தமிழன் அவர்கள், இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆலோசகர் மற்றும், இணைய தள பத்திரிகையாளர், திரு, எம்.ஐ. ஜஹாங்கீர் அவர்கள் இந்திய தேசிய மக்கள் கட்சியின் முகவை மாவட்ட செயளாலர், திரு. ஏ. செய்யது இபுறாஹிம் அவர்கள் இந்திய தேசிய மக்கள் கட்சியின் நகர் துனை பொருளாலர் - கீழக்கரை, திரு. எஸ். அயூப்கான் அவர்கள், இந்திய தேசிய மக்கள் கட்சியின் நகர் துனை செயளாலர் - கீழக்கரை ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

 

திரு. சான் பாஷா அவர்கள், இந்திய தேசிய மக்கள் கட்சியின் வட சென்னை மாவட்ட அமைப்பாளர், திரு. அஹமது அனீஸ் அவர்கள், இந்திய தேசிய மக்கள் கட்சியின் முகவை மாவட்ட இளைஞர் அணி செயளாலர், திரு. முகம்மது இக்பால் அவர்கள் இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில துனை பொதுச்செயளாலர், திரு. எம். முகம்மது நஜீம் அவர்கள் இந்திய தேசிய மக்கள் கட்சியின் பொருப்பாளர் அமீரகம், திரு. கிங்காங் முகம்மது இபுறாஹிம் அவர்கள் இந்திய தேசிய மக்கள் கட்சியின் திருப்புல்லானி ஒன்றிய செயளாலர், திரு. தேவ சந்துரு அவர்கள் மாநில செயளாலர் - தமிழ்நாடு சிறுபான்மை இளைஞர் பேரவை, திரு. க. நாகேஸ்வரன் அவர்கள் தலைவர் - தமிழர் பாதுகாப்பு பேரவை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

 

நிகழ்ச்சியில் முஸ்லிம் இட ஒதுக்கிடா ? மோசடியா ? என்ற தலைப்பில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் டாக்டர். பக்ருதீன் B.H.M.S அவர்கள் மிகச்சிறப்பாக விளக்க உரை ஆற்றினார்கள். பின்னர் பேச வந்த பன்நூல் ஆசிரியரும், திருக்குர்ஆன் விரிவுரையாளரும் ஆன திரு. காஞ்சி அப்துல் ரவூஃப் பாக்கவி அவர்கள் ” சமுதாய அரசியல் வீழ்ச்சிக்கு யார் காரணம்?” என்ற தலைப்பில் ஆவேச உரையாற்றினர்கள். தனது உரையில் இந்த 15 வருடங்களுக்குள் தோன்றிய சில அமைப்பினர் தெளகீத், ஏகத்துவம் என்ற பெயரில் எப்படி தாங்களும் பிரிந்து சமுதாயத்தையும் கூறு போட்டார்கள் என்று மெளலவி அப்துல் ரவூஃப் பாக்கவி அவர்கள் ஆவேச உரையாற்றினார்கள்.

 

திரு. நாகேஸ்வரன், திரு. தமிழகம் இக்பால், திரு. நிரோஸ், திரு. கிங்காங் இபுறாஹிம்

 

அதன் பின்னர் பேச வந்த இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக் அவர்கள் “இந்திய தேசிய மக்கள் கட்சியின் அவசியமும், அவசரமும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். தனது உரையில் இந்திய தேசிய மக்கள் கட்சியை துவக்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டதன் காரனத்தையும் தற்சயமயம் அதன் அவசியம் என்ன என்பதையும் விளக்கினார்கள்.

 

பின்னர் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் பொது மக்களின் அறிவார்ந்த கேள்விகளுக்கு இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர்கள் தெளிவான பதிலை வழங்கினார்கள். இறுதியாக இந்திய தேசிய மக்கள் கட்சியின் கீழக்கரை நகர் செயளாலர் திரு முகம்மது நிரோஸ் அவர்கள் நன்றியுரை கூற நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது.

 

இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் அரங்கின் உள்ளேயும் வெளியேயுமாக தலைவர்கள் ஆற்றிய உரையினை கவனமாக கேட்டனர்.இந்திய தேசிய மக்கள் கட்சியின் திருப்புல்லானி ஒன்றிய செயளாலர் திரு. கிங்காங் முகம்மது இபுறாஹிம் அவர்கள் உள்ளூரில் உள்ள பிரச்சினைகளை பற்றி பேசியதும், அந்த பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் இந்திய தேசிய மக்கள் கட்சி மக்களை திரட்டி போராடும் என்றும் இன்னும் சட்ட ரீதியான நடவடிக்ககைகளில் ஈடுபடு்ம் என்று பேசியது அனைவரின் பாராட்டுதலையும் பெற்றது.

 

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)


9790318182, 994050565, 9842461363,

 

இட ஒதுக்கிடா? மோசடியா? கீழக்கரையில் IDMK கருத்தரங்கம்

தமிழக இட ஒதுக்கீடும் , இந்திய தேசிய மக்கள் கட்சி கருத்தரங்கமும்

 

இடம் : ஹீசைனியா மஹால் - கீழக்கரை

நாள் : 03-11-2008 திங்கள் கிழமை

நேரம் : மாலை 6.30 மணி

 

தலைமை

திரு. எஸ். முஹைதீன் அடுமை அவர்கள்

நகர் தலைவர் - கீழக்கரை

 

முன்னிலை

 

திரு. முகவைத்தமிழன் அவர்கள்

ஆலோசகர் மற்றும், இணைய தள பத்திரிகையாளர்

 

திரு, எம்.ஐ. ஜஹாங்கீர் அவர்கள்

முகவை மாவட்ட செயளாலர்

 

திரு. ஏ. செய்யது இபுறாஹிம் அவர்கள்

நகர் துனை பொருளாலர் - கீழக்கரை

 

திரு. எஸ். அயூப்கான் அவர்கள்

நகர் துனை செயளாலர் - கீழக்கரை

 

வாழ்த்துரை

 

திரு. சான் பாஷா அவர்கள்

வட சென்னை மாவட்ட அமைப்பாளர்

 

திரு. அஹமது அனீஸ் அவர்கள்

முகவை மாவட்ட இளைஞாட அணி செயளாலர்

 

திரு. முகம்மது இக்பால் அவர்கள்

மாநில துனை பொதுச்செயளாலர்

 

திரு. எம். முகம்மது நஜீம் அவர்கள்

பொருப்பாளர் அமீரகம்

 

திரு. கிங்காங் முகம்மது இபுறாஹிம் அவர்கள்

திருப்புல்லானி ஒன்றிய செயளாலர்

 

திரு. தேவ சந்துரு அவர்கள்

மாநில செயளாலர் - தமிழ்நாடு சிறுபான்மை இளைஞர் பேரவை

 

திரு. க. நாகேஸ்வரன் அவர்கள்

தலைவர் - தமிழர் பாதுகாப்பு பேரவை

 

சிறப்புரை

 

தலைப்பு : முஸ்லிம் இட ஒதுக்கிடா ? மோசடியா ?

டாக்டர். பக்ருதீன் B.H.M.S அவர்கள்

 

தலைப்பு : சமுதாய அரசியல் வீழ்ச்சிக்கு யார் காரணம்?

திரு. காஞ்சி அப்துல் ரவூஃப் பாக்கவி அவர்கள்

 

தலைப்பு : இந்திய தேசிய மக்கள் கட்சியின் அவசியமும், அவசரமும்

திரு. குத்புதீன் ஐபக் அவர்கள்

தவைர் - இந்திய தேசிய மக்கள் கட்சி

 

நன்றியுரை

 

திரு முகம்மது நிரோஸ் அவர்கள்

நகரச் செயளாலர் - கீழக்கரை

 

குறிப்பு : உங்கள் வினாக்களுக்கு கருத்தரங்கத்தின் முடிவில் விடையளிக்கப்படும். விமர்சனங்கள், ஐயப்பாடுகள் வரவேற்கப்படுகின்றன. உங்கள் வினாக்களிலிருந்து சமூகத்தின் அரசியல் விடியல் பிறக்கட்டும்.

 

அனைவரும் வாரீர் !! அழைக்கிறது கீழக்கரை IDMK

தனி இட ஒதுக்கீடு வாபஸ் - தவிட்டை தங்கம் என்றவர்கள் தலைமறைவு

இட ஒதுக்கீட்டில் முஸ்லீம்களை மட்டுமே ஏமாற்றமுடியும்.
சிந்திப்பீர் - செயல்முடிக்க அரசியல் அதிகாரத்தை நோக்கி வாரீர்.
 

தமிழக அரசு முஸ்லீம்களுக்கும் கிருஸ்தவர்களுக்கு தலா 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது. இதில் போட்டி போட்டுக்கொண்டு யார் பெற்றுத்தந்தது. என்று “தாம்“ “தூம்“ என்று குதித்தனர். துரோகத்திற்கு துணிந்து நின்று நன்றி அறிவிப்பும், கோடிகளை செலவு செய்து பாராட்டு விழாவும் நடத்தினர். பாராம்பரிய நூற்றாண்டு பம்மாத்து பாடுபவர்களோ! இட ஒதுக்கீடு துரோகத்தை வரலாற்று சாதனை என்று கூனி குறுகி கூன்பிறையாய் கொக்கரித்தார்கள். இன்று என்ன பதில் சொல்லப்போகிறார்கள். சுனாமியை விட பயங்கரமான ஒரு தலைமுறையை பாதிக்கும் இட ஒதுக்கீட்டு பித்தலாட்ட சூழ்ச்சியை கிருஸ்துவ பெருமக்கள் புரிந்து கொண்டு போஸ்டர் அடித்து பாராட்டவில்லை. மாறாக புத்தியை தீட்டினார்கள். உயர்கல்வி நிறுவனங்களிலும், வேலை வாய்ப்புகளிலும், சுழற்சி முறையில் கிருஸ்தவர்கள் முன்பு இருந்ததை விட, அதிகமாக புறக்கணிக்கபடுவதை கண்டு தெளிந்து சூழ்ச்சியின் சூட்சமத்தை புரிந்து முன்பு இருந்த இடஒதுக்கீட்டை தருமாறு தமிழக அரசை வற்புறுத்தினார்கள். தமிழக அரசு கிருஸ்தவர்கள் கோரிக்கையை ஏற்று கொண்டது.

 

கிருஸ்தவர்கள் தமிழக அரசின் நயவஞ்சக இட ஒதுக்கீட்டை ஏற்று கொள்வதற்கு நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல, என்பதை நிரூபித்து இருக்கிறார்கள். ஆம் வேகாத பொருளை வெள்ளி தட்டில் வைத்துக்கொடுத்தால் வாங்குவதற்கு நாங்கள் மதி கெட்டவர்கள் அல்ல என்பதை காட்டியிருக்கிறார்கள். கிருஸ்தவர்களின் இந்த இட ஒதுக்கீட்டு புரிதலை ஏற்றுக்கொண்ட முதல்வர் முஸ்லீம்களுக்கு மட்டும் அறிவித்தபடியே தொடரும் என்று அறிவித்துள்ளார். முஸ்லீம் களை தவிர வேறு யாரையும் முட்டாளாக்க முடியாது என்பதை வெளிப்படுத்திருக்கிறார். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இடஒதுக்கீடு குளறுபடிகள் சரிசெய்யப்படும் என்றார். இன்றோ! சரிசெய்யப்படாமல் முஸ்லீம்கள் வரவேற்பதாக கூறுகிறார். இரட்டை நாக்கை சுழற்றுவதில் அரசியல் வாதிகள் கைதேர்ந்தவர்கள் என்பதை காட்டியிருக்கிறார்கள்.

 

பகுத்து பார்க்க கட்டளை பிறப்பித்த திருக்குர்ஆனை பின்பற்றும் முஸ்லீம்களில் சிலர் வாரியத்தை வாங்கியதால் வாய்மூடி இருக்கிறார்கள். இட ஒதுக்கீடு பித்தாலாட்டத்தை “ஆம்“ தவிட்டை தங்கம் என்று சொல்லி ஜோடிக்கிறார்கள் சர்வாதிகாரத்தில் மன்னர்களுக்கு ஜால்ரா போடுவதை போன்று ஜனநாயகத்தில் ஜால்ரா போடுகிறார்கள். முட்டாள்கள் முஸ்லீம்களாக இருக்க முடியாது. ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்பவர் மட்டுமே முஸ்லீம்களாக இருக்க முடியும். இளைஞர்களே, ஜமாத்தார்களே, அரசியல் சார்பற்ற அமைப்புகளே, போலிகளின் பொய் வேஷத்தை புரட்டி போட்டிட சமுதாயத்தை இட ஒதுக்கீட்டில் தலைகுனிய வைத்திருக்கும் தற்குறிகளை புறம் தள்ளி புதிய அரசியல் அத்தியாயம் படைக்க இரவல் அரசியலுக்கு இறுதி விடை கொடுக்க துவண்ட சமுதாயத்தை தூக்கி நிறுத்திட முஸ்லீம்களின் முதல் பொது அரசியல் கட்சி (IDMK) ஆர்பரித்து வாரீர் வாரீர்.

 

இவன்

இந்திய தேசிய மக்கள் கட்சி
தொடர்புக்கு : 9344510369 9443021050 9790318182
கிறிஸ்தவர்களுக்கான தனி இட ஒதுக்கீடு வாபஸ்! : பிஷப்புகள் கோரிக்கையை ஏற்றது அரசு

சென்னை: கிறிஸ்தவர்களுக்கான 3.5 சதவீத இட ஒதுக்கீடு உத்தரவை வாபஸ் பெறுவதாகவும், இஸ்லாமியர்களுக்கு மட்டும் 3.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டில் கிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவீதமும், முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும் உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதில், வேலைவாய்ப்பில் குறிப்பாக ஆசிரியர் நியமனத்தில் கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவர்களுக்கு அதிகளவு இடம் கிடைக்காமல் போனதாக அப்பகுதியினர் அதிருப்தி தெரிவித்தனர்.இது தொடர்பாக முதல்வரிடம் கிறிஸ்தவப் பிரதிநிதிகள் முறையிட்டனர்.

மயிலை பேராயர் சின்னப்பா: இதுகுறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஜனார்த்தனம் தலைமையிலான கமிட்டிக்கு முதல்வர் பரிந்துரைத்திருந்தார். சிறுபான்மை சமூக பிரதிநிதிகளுடன் முதல்வர் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.முதல்வர் கருணாநிதியை நேற்று தலைமைச் செயலகத்தில் சென்னை மயிலை பேராயர் சின்னப்பா, சி.எஸ்.ஐ., பேராயர் தேவகடாட்சம், காங்கிரஸ் சட்டசபை கொறடா பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

 

கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தலா 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்த போது உயர்க்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் அனுமதியிலும், வேலைவாய்ப்பிலும் கிறிஸ்தவர்கள் முன் பெற்ற வாய்ப்புகளை விட மிகக் குறைவாகவே பெற முடிந்துள்ளது. எனவே, கிறிஸ்தவர்களுக்கான 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை திரும்பப் பெற்று, முன்பிருந்தபடியே இட ஒதுக்கீட்டை தொடர வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

கிறிஸ்தவர்களின் இந்த கோரிக்கையைப் பரிசீலித்த பின் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிவிப்பு:

பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க நல்லெண்ணத்துடன் கோரிக்கை வைக்கப்பட்டது. அரசு தனி இட ஒதுக்கீட்டுக்கான அவசரச் சட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி கொண்டு வந்தது.இதில், கிறிஸ்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புத் துறைகளில் உரிய இடம் கிடைக்காமல் பின்னடைவு ஏற்படக் கூடும் என்ற ஐயப்பாடு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

 

பழைய படியே இட ஒதுக்கீடு : கல்வி, வேலைவாய்ப்புகளில் பின்னடைந்துள்ள முஸ்லிம்களுக்கு இந்த தனி இட ஒதுக்கீடு மூலம் கிடைக்கிற ஆதாயத்தை அவர்கள் வரவேற்கின்றனர்.ஆனால், கிறிஸ்தவர்களுக்கு இந்த தனி இட ஒதுக்கீடு முன்பிருந்த வாய்ப்புகளைக் குறைத்துள்ளது. எனவே, பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு பழைய படியே இட ஒதுக்கீடு தொடர, அவர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை திரும்பப் பெறுவது என்றும், சட்டத்தில் தக்க திருத்தம் மேற்கொள்வது என்றும் அரசு முடிவெடுத்துள்ளது.

 

பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டிய சூழ்நிலையைக் கருதி, அவர்களுக்கு மட்டும் இந்த தனி இட ஒதுக்கீடு ஆணையை நடமுறைப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.இவ்வாறு முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

 

ஊழல் செய்யப்பட்ட வக்ஃப் சொத்துக்களை மீட்டெடுப்போம் - IDMK தலைவர்கள் சூளுரை

இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாபெரும் அரசியல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும சமூக நல்லிணக்கப் பெருவிழா
 

மேடையி்ல் தலைவர்கள் வலமிருந்து முதலில் திரு. முகவைத்தமிழன், திரு. தங்கம் T. இராதாகிருஷ்ணன், திரு. குத்புதீன் ஐபக், திரு. மேலை நாசர், திரு. அப்துல் ரவூஃப் பாக்கவி உட்பட பலர்

 

இராமநாதபுரத்தின் மத்தியப் பகுதியும், இஸ்லாமியர் அதிகம் வசிக்க கூடிய பகுதியுமான சின்னக்கடை வீதியில் அமைந்துள்ள காயிதே மில்லத் திடலில் கடந்த 04.10.2008 அன்று சனிக்கிழமை மாலை 6.00 மணியில் இருந்து இரவு 10.00 மணி வரை இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாபெரும் அரசியல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் சமூக நல்லிணக்கப் பெருவிழா நடைபெற்றது.

 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூட்டத்தின் ஒரு பகுதி

 

பெருமளவில் அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்ட இந்நிகழச்சிக்கு முகவை மாவட்ட செயலாளர் திரு. M.I ஜாஹாங்கீர் அவர்கள் தலைமை வகித்தார். இந்திய தேசிய மக்கள் கட்சியின் கீழக்கரை நகர் தலைவர் திரு. S. முஹைதீன் அடுமை அவர்கள் வரவேற்புரை நல்கினார். இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர் A.S. அலாவுதீன், இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைமைக் கழக செளலாளர் திரு. ஹாஜா முஹைதீன், முகவை நகர் துனைச் செயலாளர் திரு. அயூப்கான் அவர்கள், திருப்புல்லானி ஒன்றியச் செயலாளர் திரு. கிங்காங் முகம்மது இபுறாஹிம் அவர்கள், சென்னை முஸ்த்தபா மற்றும் J. யூசுஃப் E.E.E ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

 

மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சேவை இயக்கத்தை சேர்ந்த திரு. தங்கம் T. இராதாகிருஷ்ணன் அவர்கள், ஏர்வாடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு. K. ரவி அவர்கள், சமூக ஆர்வலர் திரு. முகவைத்தமிழன் ஆகியோர் நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கினார்கள்.

 

இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் Dr.M. பக்ருதீன் அவர்கள், இந்திய தேசிய மக்கள் கட்சியின் வட சென்னை மாவட்ட அமைப்பாளர் திரு. A.K. ஷான் பாஸா அவர்கள் , இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு. தமிழகம் S.இக்பால் ஆகியோர் விளக்க உரை ஆற்றினார்கள்.

 

நிகழ்ச்சியில் உரையாற்றும் தலைவர்கள்

 

தமிழ்நாடு சுன்னத் அல் ஜமாத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு. மேலை நாசர் அவர்களும், பிரபல மார்க்க அறிஞரும், திருக் குர்ஆன் விரிவுரையாளரும் ஆன மெளலவி. காஞ்சி அப்தர் ரவூஃப் பாக்கவி M.A., அவர்களும் இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. M. குத்பதீன் ஐபக் M.A., அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள்.

 

நிகழச்சியின் இறுதியில் பிரபல மூலிகை மருத்துவர் திரு. அணீஸ் அஹமத் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்.

 

இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக் உட்பட நிகழச்சியில் பேசிய பலரும் தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசயில் நிலை குறித்தும், அப்பாவி முஸ்லிம்கள் மீது ஏவப்படும் அரசின் அடக்குமுறை குறித்தும், முத்துப்பேட்டை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்களில் எந்த வத நடவடிக்கையும் எடுக்காமல் மெளனம் காக்கும் தமிழக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்தும் பேசினார்கள்.

 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூட்டத்தின் ஒரு பகுதி

இன்னும் பரமக்குடியில் கொல்லப்பட்ட அப்பாவி முஸ்லிம் மாணவனின் வழக்கில் அரசியல் குறுக்கீடுகள் இல்லாது வழக்க நடத்த வேண்டும் என்றும், இன்னும் இவ்வழக்கில் நீதி கேட்ட காரனத்திற்காக அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளதை வண்மையாக கண்டித்தும், தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு இத்தனை கொடுமைகள் நடந்து அப்பாவி போல் அரசில் அங்கம் வகித்து கொண்டு போராட்டம் நடத்துவது போல் இரட்டை வேடம் போடும் தமுமுக வின் இரட்டை வேடத்தை கண்டித்தும் உரையாற்றினார்கள்.

 

இந்நிகழ்ச்சியி்ல் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

முஸ்லிம்கள் இல்லாமல் யாரும் அரசியல் பண்ண முடியாது, ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலையை உண்டாக்குவது.

 

இரவல் அரசியலுக்கு இறுதி விடை கொடுக்க சுயமாக சொந்த சின்னத்தில் நின்று நிமிர்ந்திட நம் தனித்தன்மையை காக்க பாடுபடுதல்.

 

தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, முஸ்லிம், கிறிஸ்த்தவ, தலித் மக்களை ஒன்றினைத்து பொறுப்புக்களை பகிாந்தளிக்கப்பட்டு பொது அரசியல் கட்சியாக செயல்படும்.

  

வெள்ளம், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களில் ஜாதி, மதம், பிராந்தியம் பூன்ற குறுகிய எல்லைகளை கடந்து மானிடத்திற்கு இந்திய தேசிய மக்கள் கட்சி உதவி செய்யும்.

 

முஸ்லிம்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு உள்ள பலகோடி ரூபாய் மதிப்புள்ள வக்ஃபு சொத்துக்களை அரசிடம் இருந்தும் சமூக விரோதிகளிடம் இருந்தும் மீட்டெடுக்க இந்திய தேசிய மக்கள் கட்சி பாடுபடும்.

 

தமிழகத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை வண்மையாக கண்டிக்கின்றது. இன்னும் முத்துப்பேட்டை உட்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் முஸ்லிம்களின் மீது நடத்தப்பட்ட வண்முறைக்கு காரனமானவர்கள் மீதும், சம்பந்தப்பட்டவர்கள் மீதும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றது.

 

என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

இழந்த அரசியல் உரிமைகளை மீட்டெடுக்க அழைக்கின்றது
இஸ்லாமியர்களின் முதல் அரசியில் பொதுக் கட்சி

 

இந்திய தேசிய மக்கள் கட்சி
தொடர்புக்கு : 9443021050, 8789304109

http://www.idmk.org/

சந்தி சிரிக்கும் கலைஞரின் சமூக நீதி - ஜீனியர் விகடன் செய்தி

சமூக நீதி கோரி இந்திய தேசிய மக்கள் கட்சியால் தமிழகமெங்கும் பொதுமக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்ட பிரசுரம் தற்சமயம் தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகமெங்கும் இந்திய தேசிய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மீது அரசின் அடக்குமுறை ஏவப்பட்டுள்ளது. இது குறித்து இந்த வார ஜீனியர் விகடன் பத்திரிகை முழுப்பக்க அளவிற்கு “சந்தி சிரிக்கும் கலைஞரின் சமூக நீதி” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தியை இங்கே பிரசுரிக்கின்றோம்.
படத்தை பெரிதாக்கி வாசிக்க அதன் மேல் சொடுக்கவும்.

முகவையில் IDMK கழக கொடி ஏற்றுவிழா


இராமநாதபுரத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதியும், நகரின் மையப்பகுதியும் ஆன சின்னக்கடை வீதியில் அமைந்துள்ள ஒத்தக்கடை மைதானத்தில் கடந்த 04.10.2008 சனிக்கிழமை மாலை சுமார் 4.00 மனியளவில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

 

 இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் திரு. குத்புதீன் ஐபக் அவர்கள் நிகழச்சிக்கு தலைமை வகிக்க இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் டாக்டர். பக்ருதீன் அவர்கள் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.

 

 நிகழ்ச்சியில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் முகவை மாவட்ட செயலாளர் திரு. எம்.ஐ ஜஹாங்கீர் அவர்கள், கீழக்கரை நகர தலைவர் திரு. முஹைதீன் அடுமை, திருப்புல்லானி ஓன்றிய செயலாளர் திரு. கிங்காங் முகம்மது இபுறாஹிம் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழச்சியில் பெருமளவில் ஆட்டோ ஓட்டுனர்களும், சின்னக்கடை பொதுமக்களும் கலந்து கொண்டனர்.